Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா…! இவ்ளோ பேர் 2 டோஸ்ஸையும் போட்டாச்சா…? கொரோனா அதிகம் பரவிய நாடு…. சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள முக்கிய தகவல்….!!

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதலிடத்திலிருக்கும் அமெரிக்காவில் தற்போது வரை 34.7 கோடி கொரோனா குறித்த தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

சீனாவிலிருந்து தோன்றி உலகளவில் பரவிய கொரோனா அமெரிக்காவில் தன்னுடைய தாக்கத்தை அதிகளவில் செலுத்தியுள்ளது. இதனை கட்டுப்படுத்த அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசாங்கம் அந்நாட்டில் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் கொரோனா குறித்த தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு செலுத்துவதில் அனைத்து நாடுகளும் மிகுந்த கவனத்தை செலுத்தி வருகிறது.

இந்நிலையில் தற்போது வரை அமெரிக்காவின் மொத்தமாக 34.7 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அமெரிக்காவில் 16,80, 81,416 நபர்கள் கொரோனாவினுடைய 2 டோஸ் தடுப்பூசிகளையும் முழுமையாக பெற்றுக் கொண்டுள்ளார்கள் என்று அந்நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |