பிரான்ஸ் அரசாங்கம் அங்கு அறிவித்துள்ள கொரோனா குறித்த கட்டுப்பாடுகளை நீக்க கோரி அந்நாட்டின் தலைநகரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
பிரான்ஸ் நாட்டில் உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா கிட்டத்தட்ட 6.8 மில்லியன் பேரை பாதித்துள்ளது. இதனால் அந்நாட்டின் ஜனாதிபதியான இம்மானுவேல் மேக்ரோன் கொரோனா குறித்த பல கட்டுப்பாடுகளை பிரான்ஸ் நாட்டில் அமலுக்குக் கொண்டு வந்துள்ளார். அதில் பொதுமக்கள் அனைவரும் பொது இடங்களுக்கு ஏதேனும் செல்ல நினைத்தால் அவர்கள் கட்டாயமாக ஹெல்த் பாஸ் என்னும் கொரோனா குறித்த சான்றிதழை வைத்திருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளார்.
அதோடு மட்டுமின்றி ஹெல்த் பாஸ் இல்லாத பொதுமக்கள் கொரோனா தொற்று தங்களுக்கு இல்லை என்ற சான்றிதழையாவது வைத்திருக்க வேண்டும் என்ற விதிமுறையை அமலுக்கு கொண்டு வந்துள்ளார். இதனையடுத்து பிரான்ஸ் நாட்டின் எம்.பிக்கள் சுகாதார தொழிலாளர்கள் அனைவரும் கொரோனா குறித்த தடுப்பூசியை முழுமையாக செலுத்தி கொள்ளவில்லையெனில் வேலையை விட்டு நீக்குதல் மற்றும் சம்பளத்தை பிடித்தல் போன்றவையை எதிர்கொள்ள நேரிடும் என்னும் மசோதா ஒன்றை நிறைவேற்றியுள்ளார்கள்.
இந்நிலையில் மேற்குறிப்பிட்டுள்ள கொரோனா குறித்த பல கட்டுப்பாடுகளால் மிகவும் கடுப்பான 1000 கணக்கான பிரான்ஸ் பொதுமக்கள் தலைநகர் பாரிசில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். மேலும் கொரோனா குறித்த கட்டுப்பாடுகளை நீக்க கோரி பேரணியையும் நடத்தி வருகிறார்கள்.