ருமேனிய அரசாங்கம் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பால் சுமார் 2 வாரங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கியுள்ளது.
சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா உலக நாடுகளுக்கு பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இவ்வாறு பரவிய கொரோனாவை தடுக்கும் பொருட்டு அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டிற்குள் சில கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளது.
அதன்படி ருமேனிய அரசாங்கம் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவின் பாதிப்பை தடுக்கும் பொருட்டு சுமார் 2 வாரங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கியுள்ளது. மேலும் ருமேனிய அரசாங்கம் இரவு நேரத்தில் பொதுமக்கள் வெளியே செல்வதை தடுக்கும் பொருட்டு மீண்டும் இரவு நேர ஊரடங்கையும் அமலுக்கு கொண்டு வந்துள்ளது.
அதோடு மட்டுமின்றி ருமேனிய மக்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது எதிர்வரும் காலங்களில் கொரோனா தொடர்பான சான்றிதழையும் கட்டாயமாக வைத்திருக்க வேண்டும் என்ற விதிமுறையையும் அமலுக்கு வந்துள்ளது.