வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மூன்று நபர்களை சேலம் மருத்துவமனை, சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை மற்றும் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுமதித்துள்ளனர்.
இதனையடுத்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூன்று பேரும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் கடந்த ஆறு நாட்களில் கொரோனா தொற்றினால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் 20 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.