Categories
உலக செய்திகள்

கொரோனா எதிர்ப்பு சக்தியுடன் பிறந்த குழந்தை..! ஆச்சரியமடைந்த மருத்துவர்கள்…!

 கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட மூன்று வாரங்களில் மகப்பேறு அடைந்த தாய்…. கொரோனா எதிர்ப்பு சக்தியுடன் பிறந்த முதல் குழந்தை.. ஆச்சரியத்தில் மூழ்கிய மருத்துவர்கள்….!!!

உலக நாடுகள் அனைத்தும் கடந்த ஒரு வருட காலமாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்த வைரஸின் தாக்கம் குறைந்த நிலையில் மீண்டும் கொரோனா விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு நடைமுறையில் பயன்படுத்தி வருகின்றன. இதுதொடர்பாக அமெரிக்காவில் பிறந்த ஒரு குழந்தை அனைவரையும் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவில் சுகாதார பணியாளர், தனது பிரசவத்திற்கு மூன்று வாரங்களுக்கு முன்பே முதல் டோஸ் கொரோனா  தடுப்பூசியை செலுத்தி இருக்கிறார்.

தற்போது அவருக்கு குழந்தை பிறந்துள்ள நிலையில் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை நோய் எதிர்ப்பு சக்தியுடன் பிறந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மருத்துவர்கள் கூறியது, “கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டபிறகு உருவான எதிர்ப்பு சக்தியானது, தாயின் நஞ்சுக்கொடி வழியாக மற்ற ஊட்டச்சத்துகளுடன் சேர்ந்து குழந்தைக்கு சென்று இருக்கும் என்று மருத்துவர்கள் கருத்துக் கணிப்பு கூறுகின்றனர். இதனைத் தொடர்ந்து இந்த நோய் எதிர்ப்பு சக்தி எவ்வளவு நாட்களுக்கு இருக்கும் மற்றும் நோய்க் கிருமிகளிடமிருந்து எந்த அளவுக்கு பாதுகாப்பு அளிக்கும் என்பது எங்களுக்கு தெரியவில்லை” என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Categories

Tech |