Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா..! மொத்தமாக 31.2 கோடி தடுப்பூசி டோஸ்கள்…. பல முயற்சிகளை எடுத்து வரும் அமெரிக்க அதிபர்…. சுகாதாரத் துறையின் முக்கிய தகவல்….!!

அமெரிக்காவில் இதுவரை 31,29,151,70 கொரோனா தடுப்பூசி டோஸ்களை பொதுமக்களுக்கு போடப்பட்டுள்ளதாக அந்நாட்டு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் பரவிய கொரோனா அமெரிக்காவிலும் பரவி அந்நாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் அமெரிக்க அதிபரான ஜோ பைடன் தலைமையிலான அரசாங்கம் தொற்றை விரட்டியடிப்பதற்கு தேவைப்படுகின்ற பலவகையான முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த முயற்சியில் ஒரு பங்காக அமெரிக்க அரசு பொதுமக்களுக்கு தடுப்பூசிகளை மிகவும் தீவிரமாக செலுத்தி வருகிறது.

அந்த வகையில் இதுவரை 31,29,15,170 கொரோனா தடுப்பூசி டோஸ்களை அமெரிக்க அரசு பொதுமக்களுக்கு செலுத்தியுள்ளது என்று அந்நாட்டின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. இதிலும் குறிப்பாக 14,64,56,124 பேர்கள் கொரோனா தடுப்பூசிக்கான 2 டோஸ்களையும் போட்டுக்கொண்டுள்ளார்கள் என்று அமெரிக்க நாட்டின் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

Categories

Tech |