Categories
உலக செய்திகள்

31.7 கோடி தடுப்பூசி டோஸ்கள்…. வேகமாக பரவும் கொரோனா…. சுகாதாரத் துறையின் முக்கிய அறிவிப்பு….!!

சுமார் 31.7 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தபட்டுள்ளதாக அமெரிக்க கட்டுப்பாடு மற்றும் நோய் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

உலக நாடுகள் முழுவதும் பரவிய கொரோனா தொற்றை விரட்டியடிக்க அனைத்து நாடுகளும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் கொரோனா தொற்று மென்மேலும் பரவாமலிருக்க அனைத்து நாடுகளும் பொது மக்களுக்கு தடுப்பூசி போடும் பணியை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில் தற்போது வரை சுமார் 3,17,11,797 கொரோனா தடுப்பூசி டோஸ்கள் அமெரிக்க பொதுமக்களுக்கு போடப்பட்டுள்ளதாக அந்நாட்டு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சுமார் 14,91,25,164 பேர்கள் கொரோனா தடுப்பூசிக்கான 2 டோஸ்களையும் செலுத்திக்கொண்டுள்ளதாக அமெரிக்க சுகாதார துறை அறிவித்துள்ளது.

Categories

Tech |