Categories
உலக செய்திகள்

அடடே… இவ்ளோ பேர் 2 டோஸ்ஸையும் போட்டாச்சா…? மொத்தமாக 31.8 கோடி கொரோனா தடுப்பூசிகள்…. தகவல் வெளியிட்ட சுகாதாரத்துறை….!!

அமெரிக்காவில் இதுவரை மொத்தமாக 15,00,46,006 பேர் கொரோனாவிற்கான 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டுள்ளதாக அமெரிக்க சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் பரவிய கொரோனாவை விரட்டியடிக்க அனைத்து நாடுகளும் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணியை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.

அதன்படி அமெரிக்க நாட்டில் இதுவரை மொத்தமாக 31,85,76,441 கொரோனா தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு போடப்பட்டிருப்பதாக அந்நாட்டின் கட்டுப்பாடு மற்றும் நோய் தடுப்பு மையம் அறிவித்துள்ளது.

இதனையடுத்து சுமார் 15,00,46,006 பேர் கொரோனா தடுப்பூசியினுடைய 2 டோஸ்களையும் போட்டுக்கொண்டுள்ளதாக அமெரிக்க நாட்டின் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

Categories

Tech |