அமெரிக்காவிலிருக்கும் பிரபல மருத்துவமனை தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு கட்டாயப்படுத்தியதன் விளைவாக அதில் பணிபுரியும் சுமார் 24947 பேர் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டுள்ளார்கள்.
அமெரிக்காவில் ஹூஸ்டன் மெதடிஸ்ட் என்னும் மருத்துவமனை சுமார் 300 சுகாதார மையங்களை கொண்டுள்ளதோடு மட்டுமல்லாமல் அதில் 25,000 ஊழியர்களும் பணிபுரிந்து வருகிறார்கள். இந்நிலையில் அந்த மருத்துவமனை தங்கள் நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களையும் கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொள்வதற்கு அறிவுறுத்தியதுடன் அவர்களுக்கு ஜூன் 7-ம் தேதி வரை காலக்கெடும் கொடுத்துள்ளது.
இதன் விளைவாக சுமார் 24,947 ஊழியர்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளார்கள். இதில் சில மருத்துவமனை ஊழியர்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்வதற்கு மறுப்பு தெரிவித்து வேலையை ராஜினாமாவும் செய்துள்ளார்கள்.