Categories
உலக செய்திகள்

இதில் முறைகேடு நடந்திருக்கு…. ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்த பிரேசில்…. சுகாதாரத் துறை அமைச்சரின் அதிரடி அறிவிப்பு….!!

இந்தியாவிலிருந்து கொரோனா தடுப்பூசியை இறக்குமதி செய்வது குறித்த ஒப்பந்தத்தை பிரேசில் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

பிரேசில் கடந்த பிப்ரவரி மாதம் சுமார் 32 கோடி ரூபாய் செலவில் இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவாக்சின் தடுப்பூசியின் 20 கோடி டோஸ்களை வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

ஆனால் பிரேசில் நாட்டினுடைய தேசிய சுகாதார கண்காணிப்பு நிறுவனம் இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவாக்சின் தடுப்பூசியினுடைய விரிவான ஆய்வுக்கு பிறகே தங்கள் நாட்டில் அதனை இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

இதற்கிடையே இந்தியாவுடன் போடப்பட்ட கொரோனா தடுப்பூசி இறக்குமதி குறித்த ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக பிரேசில் நாட்டின் அதிபரின் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

இதனால் இந்தியாவிலிருந்து கோவாக்சின் தடுப்பூசி டோஸ்களை இறக்குமதி செய்வது தொடர்பான ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பிரேசில் நாட்டினுடைய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |