Categories
உலக செய்திகள்

மக்களே…! கொரோனா தடுப்பூசியினால இந்த பிரச்சனை வந்திருக்கா…? தீர்வை கண்டறிந்த அறிவியலாளர்கள்….!!

கனட நாட்டின் அறிவியலாளர்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டவர்களுக்கு உருவாகும் ரத்த கட்டிகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு உகந்த தீர்வை கண்டறிந்துள்ளார்கள்.

உலகம் முழுவதும் பரவிய கொரோனாவுக்கு எதிராக பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து கொரோனா தடுப்பூசிகளில் ஒன்றான அஸ்ட்ராஜெனேகாவை செலுத்திக்கொண்ட சிலருக்கு இரத்தக்கட்டிகள் சம்மந்தப்பட்ட பிரச்சனை ஏற்பட்டுள்ளத. இதனை கனடா நாட்டின் எம்.சி மாஸ்டர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்துள்ளார்கள்.

அப்போது கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொண்டவர்களுக்கு உருவாகும் இரத்தக்கட்டிகள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு ஒரு உகந்த தீர்வை கண்டறிந்துள்ளார்கள். அதாவது இரத்தக்கட்டிகள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு சிகிச்சை பெற வரும் நபர்களுக்கு ரத்தம் உறைதலை தடுக்கும் மருந்துகளை செலுத்துவது வழக்கம்.

அத்துடன் Immunoglobulin என்று அழைக்கப்படும் ஆன்டிபாடிகளை அளவுக்கதிகமாக ரத்த கட்டிகள் சம்பந்தப்பட்ட பிரச்சனையினால் பாதிக்கப்பட்டவர்களின் உடம்பிலுள்ள இரத்த குழாய்களின் மூலம் உடம்பினுள் செலுத்துவதன் மூலம் இந்தப் பிரச்சனைகள் தீரும் என்று கண்டறிந்துள்ளார்கள்.

Categories

Tech |