Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தட்டுப்பாடான கொரோனா தடுப்பூசி…. நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்…. கூட்டத்தை ஒழுங்குப்படுத்திய காவல்துறையினர்….!!

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு பொதுமக்கள் குவிந்தனர்.

தமிழகத்தில் தற்போது பரவிவரும் கொரோனாவை கட்டுப்படுத்த அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் பொதுமக்களை கொரோனா தடுப்பூசி போடுமாறு வலியுறுத்தியது. இந்நிலையில் அனைத்து பகுதிகளிலும் தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் தடுப்பூசி போடுவதற்கு 84 நிரந்தர மையங்களும், 32 தற்காலிக மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நெல்லை அரசு மருத்துவமனை வளாகத்திலும் தடுப்பூசி போடும் பணி நடைபெறுகிறது.

இந்நிலையில் நெல்லை மாநகரம் மற்றும் நகர்ப்புறத்திலிருக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கிருந்தும் நெல்லை அரசு மருத்துவமனைக்கு தடுப்பூசி போடுவதற்காக ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இவர்களை காவல்துறையினர் ஒழுங்குபடுத்தி தடுப்பூசி போடுவதற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Categories

Tech |