Categories
உலக செய்திகள்

2.5 கோடி தடுப்பூசி நன்கொடை…. கொரோனாவை விரட்டியடிக்க முயற்சி…. செய்தியாளர்களிடம் தெரிவித்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர்….!!

 2.5 கோடி தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு வழங்குவதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பினுடைய “கோவேக்ஸ்” தடுப்பூசியை பகிர்ந்தளிக்கும் திட்டத்தின் அடிப்படையில் சுமார் 2.5 கோடி கொரோனா தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு வழங்கப்படும் என்று அமெரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதிலும் கொரோனா தொற்று அதிகமிருக்கும் இந்தியா, மெக்சிகோ, கனடா போன்ற நாடுகளுக்கு சுமார் 60,00,000 கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படுமென்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இதனையடுத்து அமெரிக்க நாட்டினுடைய தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஜாக் சுல்லிவன் தடுப்பூசிகளை கொடுப்பதினால் பிற நாட்டிலிருந்து எந்தவிதமான ஆதாயங்களையும் பெறுவதற்கு இதனை அமெரிக்கா பயன்படுத்தாது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனாவிலிருந்து பொது மக்களை காப்பாற்ற தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறது. எனவே தடுப்பூசி தேவைப்படும் நாடுகளுக்கு முதல்கட்டமாக 2.5 கோடி தடுப்பூசிகள் அளிக்கப்பட உள்ளது. மேலும் கொரோனா தொற்று அதிகமாக பரவி வரும் நாடுகளுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி பகிர்ந்தளிக்கப்படும் என்றுள்ளார். இதனையடுத்து அதிபரான ஜோ பைடன் சுமார் 8 கோடி அளவிலான தடுப்பூசிகளை பிற நாடுகளுக்கு பகிர்ந்தளிக்க முடிவு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து கொரோனா தொற்றை முடிவுக்கு கொண்டுவர ஜி7 உறுப்பு நாடுகளுடனும், நட்பு நாடுகளுடனும் அமெரிக்கா முயன்று வருவதாகவும் கூறியுள்ளார்.

Categories

Tech |