பாகிஸ்தானில் அரசு ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளாவிடில் சம்பளம் வழங்கப்படாது என்று முதல்-மந்திரி அறிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் கொரோனாவை விரட்டியடிப்பதற்கு தினந்தோறும் 2,00,000 நபர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்கிறார்கள். இதற்கிடையே 2 கோடியே 20 லட்சம் நபர்கள் இதுவரை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். ஆனால் பாகிஸ்தானில் தடுப்பூசி போடுவதால் உடலில் வேறு ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டுவிடுமென்று தேவையில்லாமல் வதந்திகள் பரவுவதால் பொதுமக்கள் தடுப்பூசி போடுவதற்கு தயக்கம் காட்டுகிறார்கள். இந்நிலையில் இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா வகையை சார்ந்த வைரஸ்கள் பாகிஸ்தானிலிருக்கும் சிந்து மாகாணத்தில் அதிக தாக்கத்தை உண்டாக்கியுள்ளது.
இந்த வைரஸ் இந்தியாவில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது போல பாகிஸ்தானிலும் தாக்கத்தை ஏற்படுத்தி விடுமோ என்கிற அச்சத்தில் தடுப்பூசி திட்டத்தை தீவிர படுத்துவதற்கு அந்நாட்டு அரசாங்கம் முடிவு எடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக சிந்து மாகாணத்தினுடைய முதல் மந்திரியான முராத் அலிசா அரசு ஊழியர்கள் தடுப்பூசி போடாவிடில் சம்பளம் வழங்கப்படாது என்று அறிவித்துள்ளார். இது தொடர்பாக நிதித்துறைக்கு அரசு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.