சீனாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொள்வதற்கு தைவான் நாட்டு மக்கள் ரெடியாக இருக்க மாட்டார்கள் என்று தேசிய செங்கி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
உலக நாடுகள் முழுவதும் பரவிய கொரோனா தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க அனைத்து நாடுகளும் தடுப்பூசி போடும் பணியை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. மேலும் கொரோனா தடுப்பூசிகளை அதிகமாக வைத்திருக்கும் நாடுகள் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவி வரும் பல நாடுகளுக்கு வழங்கி உதவி செய்து வருகின்றது.
இந்நிலையில் தைவான் நாட்டு மக்கள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டு மீண்டு வருவதற்காக போராடி வருகின்றனர். இதனையடுத்து சீன நாட்டு அரசாங்கம் தங்களால் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதற்காக தைவான் நாட்டுமக்களை அழைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து தைபேயின் தேசிய செங்கி பல்கலைக்கழகம் சீனாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளை போட்டுக் கொள்வதற்கு தைவானியர்கள் தயாராக இருக்க மாட்டார்கள் என்று கூறியுள்ளது. இதற்கிடையே தைவான் அதிகாரி ஒருவர் கூறியதாவது, தடுப்பூசி செலுத்திக் கொள்ள சீனாவிற்கு செல்வதற்கான செலவுகளை தைவானியர்களால் சமாளிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.