ரஷ்யா விலங்குகளுக்காக கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளது.
சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியது. இத்தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க அனைத்து நாடுகளிலும் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இதனிடையே கொரோனா வைரஸ் மனிதர்களை தாக்குவது போல விலங்குகளையும் பாதிக்கிறது.
அதாவது வீட்டில் வளரும் செல்லப்பிராணிகளான நாய், பூனை மற்றும் வன விலங்குகளான புலி சிங்கம் போன்றவைக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ரஷ்ய நாடு மனிதர்களைப் போலவே விலங்குகளுக்கும் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டது. அதன்படி விலங்குகளை கொரோனாவின் பிடியிலிருந்து 100% பாதுகாக்க கார்னிவக் கொவாக் என்னும் தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது.
இந்த கொரோனா தடுப்பூசி ரஷ்ய ராணுவத்திலிருக்கும் செல்லப்பிராணி நாய்க்கு செலுத்தப்பட்டுள்ளது. உலகிலேயே முதன்முறையாக ரஷ்ய நாடு விலங்குகளுக்கென்று தனியே கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனையை நிகழ்த்தியுள்ளது.