பைசர் தடுப்பூசியைப் செலுத்தி கொண்டால் 96% டெல்டா வைரஸிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம் என்று இங்கிலாந்து சுகாதாரத் துறையின் அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் மிக வேகமாக பரவி வரும் 2 வது அலைக்கு மிக முக்கிய காரணம் டெல்டா வகையைச் சார்ந்த கொரோனா வைரஸ் தான். இந்த வைரஸ் தற்போது மென்மேலும் உருமாறி டெல்டா பிளஸ்சாக தோன்றியுள்ளது. ஆனால் இந்தியாவில் புதிய டெல்டா ப்ளஸ் வகையால் மிகவும் குறைவான நபர்களே பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் இந்தியாவில் 2 ஆவது அலைக்கு காரணமான டெல்டா வகையைச் சார்ந்த கொரோனா வைரஸ் தற்போது இங்கிலாந்தில் மிக வேகமாக பரவி வருகிறது.
இதனால் இங்கிலாந்து பொது சுகாதாரத் துறையின் விஞ்ஞானிகள் சில முக்கிய ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளனர். அதாவது பைசர் தடுப்பூசியை தனிநபர் செலுத்திக் கொண்டால் 96% டெல்டா வகை வைரஸிலிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார்கள். மேலும் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை தனிநபர் செலுத்திக் கொண்டால் 92% தங்களை வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்கள்.