திருப்பத்தூரில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியதால் 6 ஆயிரம் வழக்குகள் பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனையடுத்து அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியில் சுற்றித் திரிபவர்கள் மற்றும் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் இருப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
இதன் அடிப்படையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் இதுவரையிலும் சுமார் 6 ஆயிரம் வழக்குகள் இந்த ஊரடங்கு காலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரே நாளில் 200 வழக்குகள் பதிவாகி உள்ளதாக அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.