கொரோனா தடுப்பூசி செலுத்தாத அரசு பணியாளர்களை மாவட்ட கலெக்டர் எச்சரித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டம் கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதுகுறித்து கலெக்டர் சண்முகசுந்தரம் கூறியபோது மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இதனால் தினசரி 3,500 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் அரசுத் துறை அதிகாரிகள், ஊழியர்கள் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார். எனவே கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கலெக்டர் சண்முகசுந்தரம் கூறியுள்ளார்.
இதனையடுத்து கொரோனா நோயாளியுடன் உதவிக்கு இருக்கும் உறவினர்களுக்கு தொற்று பரவும் வாய்ப்பு இருப்பதால் அவர்களை பக்கத்தில் அனுமதிக்கக் கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார். எனவே நோயாளிகளுடன் பேசுவதற்கும் அவர்களின் நலன் கருதி தெரிந்து கொள்வதற்கும் அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். அந்த அதிகாரிகளுக்கு செல்போன் மூலம் உறவினர்கள் நோயாளிகளை குறித்து தகவல் தெரிந்து கொள்ளலாம் என்று அவர் கூறியுள்ளார். மேலும் குழந்தைகள் வைத்திருக்கும் பெற்றோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது உறுதி செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவிதித்துள்ளார்.