Categories
தேசிய செய்திகள்

கொரோனாவிற்கு மருந்து…. இந்திய ஆயுர்வேத நிறுவனம் கண்டுபிடிப்பு…?

கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக பதஞ்சலி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தற்போதைக்கு வைரஸின் பரவல் மட்டும் நடைபெறாமல் தடுத்து பாதிப்பை குறைக்கும் நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. மேலும் உலக அளவில் இருக்கக்கூடிய நாடுகள் இந்த வைரசுக்கு எதிரான மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியாவில் ஆயுர்வேத பொருட்களை விற்பனை செய்து வரும் பிரபல பதஞ்சலி நிறுவனம் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாகவும், இதனால் நோயாளிகள் ஐந்து நாட்கள் முதல் 14 நாட்கள் வரை சீராக உட்கொண்டால் அவர்கள் குணமடைவார்கள் பல நோயாளிகள் இதனை உட்கொண்டு குணம் அடைந்ததாகவும் அந்த நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பதஞ்சலி நிறுவனத்தின் இந்த அறிவிப்பை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பரிசோதித்த பின் அவர்கள் சார்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படுமா ? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும் பதஞ்சலி நிறுவனம் கூறுவது உண்மையா என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது.

Categories

Tech |