Categories
தேசிய செய்திகள்

கொரோனாவுக்கு முடிவுரை – கட்டுப்பாட்டை விலக்கும் கேரளா ..!

கொரோனவை விரட்ட கேரளா 4 மண்டலங்களாக பிரிக்க்கப்பட்டு ஊரடங்கில் தளர்வு செய்வது குறித்து கேரள முதல்வர் கூறினார்.

கேரள மாநிலத்தில் வரும் இருபதாம் தேதிக்குப் பிறகு கட்டுப்பாடுகளுடன் வாகனங்களுக்கான  ஒற்றை இரட்டை இலக்க எண் முறை அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் திரு பினராய விஜயன் தெரிவித்துள்ளார். கேரளாவில்  4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அதற்கு ஏற்றபடி ஊரடங்கில் தளர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது .

இது குறித்து திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கேரளா முதல்வர், வரும் 20ம் தேதிக்குப் பிறகு மாநிலத்தில் வாகனங்களுக்கான ஒற்றை இரட்டை படை முறை  செயல்படுத்தப்படும் என்றும், பெண்கள் இயக்கும் வாகனங்களுக்கு சலுகை வழங்கப்படும் என்றும் கூறினார்.

காசர்கோடு, கண்ணூர், மலப்புரம்,  கோழிக்கோடு போன்ற அதிகபட்ச கொரோனா பாதிப்புகள் உள்ள மாவட்டங்கள் ஒன்றிணைக்கப்பட்டு முதல் மண்டலமாக மாறும் என்றும், இந்த மண்டலத்தில் மே 3ஆம் தேதி வரை எந்தவிதமான தளர்வும் இல்லாமல் ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இரண்டாவது மண்டலத்தில் பத்தினம்திட்டா, எர்ணாகுளம், கொல்லம் ஆகியவை சேர்க்கப்படும் என்று குறிப்பிட்ட அவர், இங்கு அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகள் கண்டறியப்பட்டு சீல் வைக்கப்படும் என்றும், ஆலப்புலா, திருவனந்தபுரம், பாலக்காடு, திருச்சூர், வயநாடு ஆகிய மாவட்டங்கள் அடங்கிய மூன்றாவது மண்டலத்தில் பகுதியளவு தளர்வு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

கொரோனா பாதிப்பு இல்லாத கோட்டயம்,  இடுக்கி மாவட்டங்கள் நான்காவது மண்டலத்தில் சேர்க்கப்பட்டு தளர்வுகளை மேற்கொள்ள மத்திய அரசிடம் அனுமதி கோரப்படும் என்றும்  முதலமைச்சர் திரு பினராய் விஜயன் குறிப்பிட்டார்.

Categories

Tech |