Categories
தேசிய செய்திகள்

கொரோனா நோயாளிகளுக்கு ராக்கி… செவிலியர்களின் நெகிழ்ச்சியான செயல்…!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசு மருத்துவமனையில் இருக்கின்ற கொரோனா நோயாளிகளுக்கு ராக்கி கட்டி சகோதர பந்தத்தை வெளிப்படுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ரக்ஷா பந்தன் தினம் இந்துக்களின் பண்டிகை என்பதையும் தாண்டி சகோதர பாசத்தை வெளிக்காட்டும் ஒரு சமூக விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. ரக்ஷா பந்தன் என்றாலே பாதுகாப்பு பிணைப்பும், பாதுகாப்பு பந்தமும் என்று பொருள்படும். அந்த நாளில் ஒரு ஆண் தனது கையில் ராக்கி கயிறை கட்டிக்கொள்வது, அவருக்கு கயிறு கட்டிய அந்தப் பெண்ணை சகோதரியாக நினைத்து அப்பெண்ணின் வாழ்நாள் முழுவதுமான பாதுகாப்பிற்கும் மற்றும் நலத்துக்கும் ஒவ்வொரு நாளும் காவலாக இருப்பேன் என்று உறுதி அளிப்பது போன்றே கருதப்படும்.

இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் சந்திராபூரில் உள்ள அரசு மருத்துவமனையில் பணி புரிகின்ற பெண் செவிலியர்கள், கொரோனா காலம் என்பதையும் தாண்டி அங்கு சிகிச்சை பெற்று வருகின்ற ஆண் கொரோனா நோயாளிகளுக்கு ராக்கி கட்டி சகோதர பந்தத்தை வெளிப்படுத்திய சம்பவம் சிலிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |