திருப்பத்தூரில் இரண்டு நாட்களில் 14 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 14 பேருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது . அவர்களில் ஹோட்டல் நிறுவனர் தொற்றினால் பாதிக்கப்பட்டு இருந்ததால் அவர் நடத்திவந்த ஹோட்டல் மூடப்பட்டது. அதோடு சப் இன்ஸ்பெக்ட்ர் ஒருவருக்கு தொற்று பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதோடு வாணியம்பாடி காவல் நிலையமும் மூடப்பட்டது.
மேலும் வாணியம்பாடி தாசில்தார் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வேலூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடேயே கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.