திருப்பத்தூர் மாவட்டத்தில் மேலும் 95 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
உலகெங்கிலும் கொரோனாவின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளொன்றுக்கு கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதனையடுத்து நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒரே நாளில் 95 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தெரியவந்தது. இதனையடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் 30 பேர் கொரோனாவிற்கான சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.