குடியாத்தத்தில் வங்கி ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் வங்கி அடைக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அதை தடுப்பதற்கான பல்வேறு முயற்சிகளை மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் வேலூரில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டபோது, 297 பேருக்கு தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் இருக்கும் 35 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் குடியாத்தம் இந்தியன் வங்கியில் பணியாற்றும் ஊழியருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து வங்கி ஊழியருக்கு கொரோனா தொற்று இருப்பதாக போர்டு வைக்கப்பட்டு, வங்கியானது அடைக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளனர். இதுகுறித்து வங்கி அதிகாரியிடம் கேட்டபோது வங்கி ஊழியருக்கு கொரோனா தொற்று இருப்பதால் நேற்று மதியம் வங்கி அடைக்கப்பட்டது என தெரிவித்துள்ளனர். மேலும் சுகாதார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வங்கி வழக்கம்போல் செயல்படும் என வங்கி துறையினர் தெரிவித்துள்ளனர்.