Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் இவ்ளோ பேருக்கா…? அதிகரிக்கும் கொரோனா தொற்று…. தீவிரப்படுத்தப்படும் கட்டுப்பாடுகள்….!!

ஜோலார்பேட்டை பகுதியில் ரயில்வே ஊழியர் சேர்த்து 21 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் தற்போது நிலவி வரும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சுகாதாரதுறை அதிகாரிகள் ஜோலார்பேட்டை பகுதியில் இருக்கக்கூடிய சந்தைகோடியூர் மற்றும் அதனை சுற்றி இருக்கும் பகுதிகளில் பணிபுரியும் உரிமையாளர்கள் எல்லோருக்கும் கொரோனா பரிசோதனை செய்துள்ளனர்.

அப்போது ஜோலார் பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒரே நாளில் ரயில்வே ஊழியர் சேர்த்து 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் நகராட்சி ஊழியர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள வீடுகளுக்குச் சென்று கிருமி நாசினி தெளித்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Categories

Tech |