Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“வேகமெடுக்கும் கொரோனா தொற்று” ஒரே நாளில் 648 பேருக்கு உறுதி…. பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை அதிகாரியின் அறிவுரை….!!

வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் மேலும் 648 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், இதுவரையிலும் 516 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் மேலும் 648 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 400க்கும் மேற்பட்ட நபர்கள் வேலூர் மாநகராட்சி பகுதியை சேர்ந்தவர்கள், மீதம் இருப்பவர்கள் சிகிச்சைக்காக வேலூருக்கு வந்த பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர்.

இதனையடுத்து தொற்றால் பாதிக்கப்பட்ட 648 நபர்களையும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதித்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் இதுவரையிலும் தொற்றினால் 28 ஆயிரத்து 534 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 25 ஆயிரத்து 492 நபர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் இந்த தொற்றுக்கு 408 நபர்கள் பலியாகிவிட்டனர். இதனையடுத்து 2,633 நபர்கள் மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்கள் அரசு விதிமுறைகளை சரியாக பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |