கொரோனா பரிசோதனைக்கான இலவச சோதனை கருவிகள் வாங்கும் இணையதளம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக செயல்படவில்லை என பிரித்தானியா நாட்டு மக்கள் கூறியுள்ளனர்.
பிரித்தானிய நாட்டில் கடந்த சில மாதங்களாகவே விதிக்கப்பட்டிருந்த கொரானா விதிமுறைகள் இன்று முதல் தளர்த்தப்பட்டுள்ளன. இதனை அடுத்து பிரித்தானியா நாட்டு மக்கள்கொரோனா பரிசோதனைக்காக அரசாங்க வலைதளத்தில் ‘at-home kits’ என்ற இலவச சோதனை கருவிகளை வாங்க முயற்சித்துள்ளனர். அப்போது அதில் “இணையதளம் மூலமாகவோ அல்லது சேவை மையத்தின் மூலமாகவோ இன்று சோதனைக் கருவிகளை வாங்க முடியாது தயவுசெய்து சோதனை கருவிகள் கிடைக்கும் நேரத்தில் மீண்டும் நாளை முயற்சிக்கவும்” என வந்துள்ளது.
இந்த நிலையிலும் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து மக்கள் கேட்ட கேள்விகளுக்கு தவறாமல் அந்த இணையதளம் பதில்கள் அளித்துள்ளது. இதுகுறித்து சுகாதார மற்றும் சமூக பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் கூறியதாவது “அரசாங்க இணையதளமான gov.uk என்பதன் வழியாக சோதனைக் கருவிகள் கிடைக்க உள்ளதை நாங்கள் உறுதி செய்துள்ளோம். ஆனால் இன்று வலைதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது. அது இப்போது மீண்டும் சரி செய்யப்பட்டுள்ளது” என கூறினார்.