Categories
தேசிய செய்திகள்

கொரோனா பதிப்பு உலகளவில் இந்தியாவில் குறைவு தான் – ஹர்ஷ் வர்தன் நம்பிக்கை …!!

உலக அளவில் கொரோனா தொற்று பாதிப்பு இந்தியாவில் மிக குறைவாக இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

உலக நாடுகள் அனைத்திலும் கொரோனா பாதிப்பானது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. இதை தடுக்கும் பணிகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இதுபற்றி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ” இந்தியாவில் இதுவரை 12 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 30,000 பேர் அதனால் பலியாகியுள்ளனர். உலக அளவில் கணக்கிடும்போது இந்தியாவில் ஒரு மில்லியன் மக்கள் தொகையில் 864 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே உலக அளவில் கணக்கிடும் போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு உயிரிழப்பு எண்ணிக்கையும் மிக குறைவாகவே இருக்கின்றது. இன்று வரை ஒரு கோடியே 5 லட்சம் மக்களின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு உள்ளன. மேலும் தினமும் 3 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. இன்றுவரை நாட்டில் தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கையானது 63.45 விழுக்காடாகவும், பலியானவர்களின் எண்ணிக்கை 2.3 விழுக்காடாகவும் இருக்கின்றது.

இதனைத்தொடர்ந்து கொரோனா தடுப்பு பணியில் மத்திய அரசு தனது முக்கிய பங்கினை வகித்து கொண்டிருக்கிறது. அதே சமயத்தில் வைரஸ் பாதித்த நபர்களுடன் தொடர்பில் இருந்தவரை மிக எளிதாக கண்டறியக்கூடிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பாதிப்பு தொடங்கிய காலகட்டத்தில் இந்தியாவில் பிபிஇ கிட் உபகரணங்கள் உற்பத்தி செய்யவில்லை. தற்போது வெளிநாடுகள் அனைத்துக்கும் ஏற்றுமதி செய்யக்கூடிய அளவுக்கு இந்தியா வளர்ச்சி அடைந்திருக்கிறது என பெருமிதம் கூறியுள்ளார்.

Categories

Tech |