பிரிட்டனை சேர்ந்த பெண் ஒருவர் கொரோனா வைரஸ் தான் தனது உயிரை காப்பாற்றியதாக தெரிவித்துள்ளார்.
கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டு 11 நாட்கள் கழித்து ஏஞ்சலா என்ற பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவரது இதயம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதை கண்டுபிடித்து கூறியுள்ளனர். மார்ச் 22 அன்று செல்சியா மற்றும் வெஸ்ட்மின்ஸ்டர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு ஸ்கேன் மூலம் இதயம் மற்றும் நுரையீரலை சுற்றி திரவம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .
அவர் ராயல் ப்ரம்டனுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு நுரையீரல், நரம்புகள், மூட்டுகள் மற்றும் இதயம் உட்பட உடலில் இருக்கும் பல உறுப்புகளை சேதப்படுத்தும் Eosinophilic Granulomatosis with Polyangiitis (EGPA) நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து ஏஞ்சலா கூறுகையில், “எனது இதயம் இயங்கக்கூடிய வழியில் செயல்படவில்லை என மருத்துவர்கள் தெரிவித்ததை தொடர்ந்து மிகவும் வேதனைப்பட்டேன். EGPA கண்டுபிடிக்கப்படாமல் இருந்திருந்தால் நான் உயிரிழந்திருப்பது உறுதி. கொரோனா உடலையும் இதயத்தையும் மனஉளைச்சலுக்கு உள்ளாக்கியது.
ஆனால் கொரோனா காரணமாகவே எனக்கு EGPA எடுக்கப்பட்டதாக மருத்துவர்கள் கூறினர். நீண்ட காலத்திற்கு இது எனது உயிரை காப்பாற்றியுள்ளது. ஆனால் கொரோனா வைரஸ் குறுகிய காலத்தில் என்னை கொன்றது என ஏஞ்சலா கூறியுள்ளார். சுமார் 5 வாரங்கள் மருத்துவமனையில் கழித்த ஏஞ்சலா தனக்கு சிகிச்சை அளித்த அனைத்து NHS ஊழியர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்து மிகச் சிறந்தவர்கள் என பாராட்டியுள்ளார். ஏஞ்சலா பூரண குணமடைந்து மருத்துவமனையை விட்டு சென்றது மருத்துவ ஊழியர்களுக்கு மன உறுதியைக் கொடுக்கும் என ஆலோசகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.