Categories
உலக செய்திகள்

என்ன…! இங்கிலாந்தில் உணவு பற்றாக்குறையா…? சுய தனிமையில் ஈடுபடுத்தப்படும் பொதுமக்கள்…. எச்சரிக்கை விடுத்த நிர்வாகிகள்….!!

NHS என்னும் கொரோனா செயலி மூலம் எச்சரிக்கப்பட்டு சுய தனிமைப்படுத்துதலுக்கு ஈடுபடுத்துவது தொடர்புடைய விஷயத்தில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காவிடில் இங்கிலாந்தில் உணவு போன்ற முக்கிய சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும் என்று பல நிர்வாகிகள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

இங்கிலாந்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களை NHS என்னும் கொரோனா செயலி தம்முடைய பாதுகாப்பை கருதி சுய தனிமைப்படுத்துதலுக்கு அறிவுறுத்தும். இதன் விளைவாக தற்போது வரை சுமார் 5,00,000 மக்கள் தங்களை சுய தனிமைப்படுத்துதலுக்கு ஆளாக்கியுள்ளார்கள்.

இதனால் இங்கிலாந்து நாடு முழுவதும் உணவு போன்ற பிற சேவைகளுக்கு கடுமையாக பாதிப்பு வந்துள்ளது. இந்நிலையில் பல முக்கிய தொழில் நிர்வாகிகள் தங்கள் நிறுவனத்தில் 20% ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது தொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.

மேலும் இவர்கள் இவ்வாறு சுய தனிமைப்படுத்துதல் தொடர்புடைய விவகாரத்தில் இங்கிலாந்து அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் நாடு முழுவதும் உணவு பற்றாக்குறை ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

Categories

Tech |