ஆம்பூரில் கொரோனா சிகிச்சை முகாம் அமைக்கும் பணியை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர், மாதனூர், சோலூர், உமராபாத் போன்ற பகுதிகளில் கொரோனாவிற்கான சிறப்பு சிகிச்சை முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் ஆம்பூரில் 100 படுக்கை வசதியுடன் கொரோனா சிகிச்சை முகாம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இதனை திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவனருள் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது உதவி கலெக்டர் கிருஷ்ணமூர்த்தி, வாணியம்பாடி கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி, தாசில்தார் ஆனந்த கிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் அவருடன் இருந்துள்ளனர்.