இந்தியாவில் கொரோனா அறிகுறியான மூச்சுத்திணறலால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண் தீவிர சிகிச்சை பிரிவுக்கு அழைத்து செல்லும் முன்னரே மரணமடைந்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர்க்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது மூச்சுதிணறல் கொரோனாவின் முக்கிய அறிகுறி என்பதால் அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காக அவரது ரத்த மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண்ணின் நிலைமை மிகவும் மோசமானதால் உறவினர்கள் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்ல முயன்ற பொழுது தீவிர சிகிச்சை பிரிவு அறை கதவின் சாவியை காணாமல் ஊழியர்கள் வெகுநேரம் தேடியுள்ளனர். பின்னர் பெண்ணிற்கு அவசர சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதால் பூட்டு உடைக்கப்பட்டு பெண்ணிற்கு சிகிச்சை அளிக்க முயற்சித்துள்ளனர். ஆனால் அதற்கு முன்பாகவே அந்தப் பெண் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக சுகாதார அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.