Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

185 நபர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை…. விதியை மீறியதால் காவல்துறையினர் நடவடிக்கை…. நெல்லையில் நடந்த சம்பவம்….!!

நெல்லையில் விதியை மீறி வாகனங்களில் சுற்றித்திரிந்த 185 நபர்களுக்கு கட்டாய கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் கொரோனாவை விரட்டியடிப்பதற்கு அரசாங்கம் முழு ஊரடங்கை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இருப்பினும் அத்தியாவசிய தேவையின்றி சில நபர்கள் வாகனங்களில் வெளியே சுற்றித் திரிகின்றனர். இந்நிலையில் திருநெல்வேலி மாநகராட்சியினுடைய காவல்துறை அதிகாரிகள் விதியை மீறி தேவையின்றி வெளியே சுற்றித் திரியும் நபர்களுக்கு கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்வதற்கு முடிவு எடுத்தனர்.

அதன்படி 7 சோதனைச் சாவடிகளிலும், வண்ணார்பேட்டை மேம்பாலத்திற்கு அருகே என 8 பகுதிகளில் தேவையின்றி வெளியே சுற்றித்திரிந்த சுமார் 185 நபர்களுக்கு கட்டாய கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.

Categories

Tech |