Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“கொரோனா தடுப்பு நடவடிக்கை” கலெக்டர் நேரில் சென்று ஆய்வு….!!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட வருவாய் கூட்டரங்கில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கருங்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் கொரோனா பராமரிப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதனை மாவட்ட கலெக்டர் அரவிந்த் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் இருந்து சளி மாதிரி சேகரிப்பது பற்றி மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் கேட்டருந்துள்ளார்.

இதனையடுத்து மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரியில் ஏற்படுத்தப்பட்டுள்ள கொரோனா பராமரிப்பு மையத்தையும் கலெக்டர் அரவிந்த் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது அதிகாரிகள் பலர் அவருடன் இருந்தனர். அதன்பின் மாவட்ட வருவாய் கூட்டரங்கில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பரிசோதனை மைய நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார்.

Categories

Tech |