Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பாதிப்பு அறிந்து தனிமைப்படுத்துதல்…. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை…. அதிகாரிகளின் ஆய்வு….!!

வளையாம்பட்டு ஊராட்சியில் அதிகாரிகள் வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வளையாம்பட்டு ஊராட்சியில் கிராம சுகாதார செவிலியர், அங்கன்வாடி பணியாளர் மற்றும் தன்னார்வலர்கள் போன்றோர் வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து அந்த பகுதியில் இருக்கும் குடும்பத்தினருக்கு உடல் ஆரோக்கியம் குறித்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த பரிசோதனையில்  ஆக்சிஜன் அளவு குறைவாக இருக்கும் நபர்களை தொற்றின் பாதிப்பு தன்மை பொறுத்து அவர்களை வீட்டில் தனிமைப்படுத்தி வருகின்றனர்.

மேலும் தொற்று அதிகமாக காணப்படும் நபர்களை கொரோனா சிகிச்சை மையத்தில் தனிமைப்படுத்துவதா அல்லது அரசு மருத்துவமனையில் தனிமைப் படுத்துவதா என்று கணக்கெடுப்பு பணி வட்டார மருத்துவ அலுவலர் ச.பசுபதி தலைமையில் நடைபெற்று வருகின்றது. அந்த பணியினை கலெக்டர் சிவனருள் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது அனைத்து துறை ஊழியர்களும் அவருடன் இருந்தனர்.

Categories

Tech |