Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

நீங்கள் ஒத்துழைத்தால் போதும்…. கண்டிப்பாக தடுக்க முடியும்…. காவல்துறையினரின் முக்கிய பங்கு….!!

பொதுமக்களிடையே கொரோனா தடுப்பு விழிப்புணர்வு குறித்து காவல்துறையினரின் சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டத்தில் போலீஸ் துறை சார்பில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு குறித்து சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது. இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தொடங்கிய ர் இந்த சைக்கிள் ஊர்வலத்துக்கு போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமை தாங்கினார். இதனையடுத்து போலீஸ் சூப்பிரண்டு சைக்கிளில் ஊர்வலமாக சென்று மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்த சைக்கிள் ஊர்வலம் தஞ்சை சாலை, துர்காலயா சாலை, மருதபட்டினம், நெய்விளக்கு, தோப்பு, கடைவீதி, பழைய பேருந்து நிலையம் வழியாக அழகிரி காலனியில் நிறைவுபெற்றது. மேலும் இந்த ஊர்வலத்தில் அதிரடிப்படை காவல் துறையினர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் கூறியதாவது, கொரோனா  நோய்த்தடுப்பு பணிகளில் அரசின் கட்டுப்பாட்டு நடைமுறைகளை செயல்படுத்துவதில் காவல்துறையினர் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இப்பணியில் இரவு பகலாக காவல்துறையினர் ஈடுபட்டு தொடர்ச்சியாக மக்களுக்கு கொரோனா தடுப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சைக்கிள் ஊர்வலம் நடைபெற்று இருக்கின்றது. எனவே மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டால் நிச்சயம் கொரோனா நோய் தொற்றை தடுக்க முடியும். அதற்கு அரசின் வழிகாட்டுதலை அனைவரும் கடைபிடித்து உரிய ஒத்துழைப்பை கொடுக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தெரிவித்துள்ளார். மேலும் கல்வியின் அவசியம் நோயற்ற வாழ்க்கை முறைகள் குறித்து விளக்கி சிறுவர்களுக்கு பரிசு வழங்கினார்.

Categories

Tech |