Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த…. சமூக இடைவெளியுடன்…. இவ்வளவு பேர் தடுப்பூசி செலுத்தினர்….!!

திருக்கழுக்குன்றத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி பேரூராட்சி அலுவலகத்தின் சார்பில் நடைபெற்றது. 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள திருக்கழுக்குன்றம் பேரூராட்சி அலுவலகத்தின் சார்பில் பேருந்து நிலையம் அருகில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் வைத்து தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது.

இதனையடுத்து பேரூராட்சி செயல் அலுவலரான திருஞானசம்பந்தம் மேற்பார்வையில் மருத்துவ பணியில் இருப்பவர்கள் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த முகாமில் 18 மேற்பட்டவர்கள் 130 பேரும், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் 20 பேரும் சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் முகக்கவசம் அணிந்தும் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

Categories

Tech |