Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மக்களே உஷாரா இருங்க…. ஒரே நாளில் 500ஐ நெருங்கிய கொரோனா…. வேலூரில் அதிகரிக்கும் பாதிப்பு….!!

வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500-ஐ நெருங்கியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இவ்வாறு இரண்டு நாட்களுக்கு முன்பு  441 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டபோது நேற்று ஒரே நாளில் 497 நபர்களுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனவே வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500-ஐ நெருங்கியுள்ளது.

மேலும் வேலூர் மாநகராட்சியில் மட்டும் 300 க்கும் மேற்பட்டவர்கள் தொற்றினால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுடன் தொடர்பில் இருந்த குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் தனிமை படுத்தப்பட்டுள்ளனர். இதுவரை வேலூர் மாவட்டத்தில்  25 ஆயிரத்து 807 நபர்கள் தொற்றினால் பாதிக்கப்பட்டு, அவர்களில் 23 ஆயிரத்து 31 நபர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 2,403 நபர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்து வருகின்றனர் என மாவட்ட சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |