வேலூர் மாவட்டத்தில் மேலும் 489 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் மேலும் 489 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து வேலூர் மாவட்டத்தில் இருக்கும் 26 பகுதிகளும் கட்டுப்பாடு மிகுந்த பகுதிகளாக அறிவித்து இருப்பதாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.