Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து இறந்த 7 பெண்கள்…. மருத்துவ அலுவலரின் விளக்கம்… திருப்பத்தூரில் பரபரப்பு….!!

ஆம்பூர் சிகிச்சை மையத்தில் தொடர்ந்து ஏழு பெண்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த ஏழு பெண்கள் தொடர்ந்து உயிரிழந்துள்ளனர். இவர்களில் ஒரு பெண் கொரோனா பாதிப்பினாலும், மீதமிருக்கும் ஆறு பெண்களும் சுவாசத் தொற்று, சர்க்கரை, ரத்தக் கொதிப்பு, மற்றும் இருதய நோய் பாதிப்பு போன்ற காரணங்களுக்காக உயிரிழந்துள்ளனர். இதனிடையே ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அடுத்தடுத்து ஏழு பெண்கள் உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடேயே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுபற்றி மருத்துவ அலுவலர் ஷர்மிளாவிடம் கேட்டபோது தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தது ஒரு பெண் மட்டுமே என்று கூறியுள்ளார். ஆனால் மற்றவர்கள் சுவாச தொற்று பாதிப்பால் தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றபோது தீர்வு கிடைக்காத காரணத்தால், பிறகு அரசு ஆஸ்பத்திரிக்கு தாமதமாக வந்திருக்கின்றனர். இதுபோன்று சுவாசத் தொற்று இருப்பவர்கள் முதலில் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து இருந்தால் சிகிச்சை பெற்று வீடு திரும்பி இருக்கலாம் என்று ஷர்மிளா தெரிவித்துள்ளார்.

Categories

Tech |