குமரி மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 819 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. எனவே முதல்கட்ட அலையின்போது தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 200 ஆக இருந்துள்ளது. ஆனால் இரண்டாவது அலையின்போது தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 500- ஐ தாண்டியுள்ளது. இந்நிலையில் குமரி மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டபோது மேலும் 819 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களில் 13 பேர் வெளிமாநிலத்தில் சேர்ந்தவர்களாகவும், 806 பேர் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்களாகவும் இருக்கின்றனர். இதனையடுத்து கொரோனா வைரஸ் தொற்றால் 450 ஆண்களும் , 369 பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவ்வாறு குமரிமாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 819 பேருடன் சேர்த்து மொத்தம் 25 ஆயிரத்து 427 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைதொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 484 ஆக உயர்ந்துள்ளது.