கொரோனா தொற்று முதன்முறையாக குறைவான எண்ணிக்கையில் பதிவாகியுள்ளது.
ஜெர்மனியில் கடந்த அக்டோபர் 13ஆம் தேதி 1 வாரத்திற்கு 1,00,000 பேரில் 29.6% பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று நிலவரப்படி, கடந்த 1 வாரத்திற்கு 1,00,000 பேரில் 29.7% நபர்களுக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆனால் நேற்று முன்தினம் நிலவரத்தின்படி 34.1% பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்று ரோபாட் கோச் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் ஜெர்மனியில் தற்போது தான் தொற்றின் எண்ணிக்கை மிகவும் குறைவாக பதிவாகியுள்ளது. இதற்கு வியாழன் கிழமை பொது விடுமுறையாக இருப்பதுதான் காரணம் என்பதை மறுக்க முடியாது என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.