Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸ் – தினம், தினம் அச்சத்தில் சீன மக்கள்…பலி எண்ணிக்கை 1,113 ஆக அதிகரிப்பு..!!

கொரோனா வைரஸ் நோயினால் சீனாவில் ,113 பேர் உயிரிழந்துள்ளனர். உயிர் பலி எண்னிக்கை அதிகரித்து உலகையே அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். பலியானோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சீனாவின் சுகாதார துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

உலகில் பல நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது.

சீனாவின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரத்தில் முதன்முதலாக கொரோனா வைரஸ் பரவியது. ஆனால்  தற்போது உலகம் முழுவதும் பரவி  மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது.

கொரோனாவின் தாக்கம் சீனா, மலேசியா, தைவான், ஜப்பான், கொரியாஆகிய நாடுகளில் தான் அதிகமாக பரவுகிறது என கண்டறியப்பட்டுள்ளது. சீனா, ரஸ்யா அமெரிக்கா ஆகிய நாடுகள் கொரோனவிற்கான தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்றைய தகவலின்படி, சீனாவில் மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு 1,011 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 40 ஆயிரத்து 640 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பதாகவும் அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தது.

உய்த்திரிழந்தோரின் எண்ணிக்கை தற்போதைய நிலவரப்படி அதிகரித்து வருவதாகவும், 44 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 1113 பேர் பலி ஆகியுள்ளதாகவும் அந்நாட்டு சுகாதார துறை விளக்கமளித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக தினம் தினம்  நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். இதனால் சீன மக்கள் பெரும் அச்சத்தில் இருக்கின்றனர்.

Categories

Tech |