மருத்துவர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள் என்று பலர் வாய் வார்த்தையாக கூறுவது உண்டு ஆனால் அந்த கூற்று உண்மைதான் என்று தற்போது கண்கூடாக நிரூபணமாகியிருக்கிறது.
சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக சற்று ஓய்வெடுக்காமல் உழைத்து வரும் சீன மருத்துவ பணியாளர்கள் தான் அந்நாட்டு மக்களுக்கு கடவுளாக மாறி இருக்கின்றன.
சீனாவின் உஹான் நகரத்தில் உள்ள பாம்பு இறைச்சியில் இருந்து வெடித்து கிளம்பிய இந்த உயிர்க்கொல்லி வைரஸ் 31 நகரங்களுக்கும் பரவியது.
விளைவு, ஆயிரக்கணக்கான நோயாளிகள் படையெடுப்பில் சிக்கி தத்தளித்தன மருத்துவமனைகள்.
தீயை விட தீவிரமாக பரவிய கொரோனோவை கட்டுப்படுத்த மருத்துவர்கள், செவிலியர்கள்,சுகாதாரப் பணியாளர்கள் இரவு பகலாக உழைக்க வேண்டியிருக்கிறது.
பணிபுரியும் 6 மணி நேரமும், குடிநீர் அருந்த முடியாது, உணவும் கிடையாது, கழிப்பறைக்கு போக முடியாது, இதையும் மீறி மணி ஒலித்ததும் நோயாளிகளைக் கவனிக்க தவறுவதில்லை.
முக கவசம் மற்றும் மூன்று அடுக்கு உடையை நீண்ட நேரம் அணிவதால் தோல் தடிப்பு மற்றும் அரிப்பு ஏற்படுகிறது.
இதை பொருட்படுத்தாமல் மருத்துவத் துறையில் பணி தொடர்கிறது. நோய் தொற்று ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக மருத்துவமனைக்கு என தனி செல்போன்களையும் வாங்கியிருக்கிறார்.
பணி முடிந்ததும் வீட்டுக்கு செல்ல முடியாமல் ஹோட்டல்தான் இருப்பிடம், ஹோட்டலில் இருந்தபடியே குழந்தைகளுடன் வீடியோ மூலம் பேசுவது, இவர்களுக்கு வாடிக்கையாகிவிட்டது.
கொரோனா வைரஸ் பிடியில் சிக்கி தவிக்கும் சீனா நாளுக்கு நாள் அதிகரித்து வரும் உயிர் பலி என செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
ஆனால் நோயின் பிடியில் இருந்து மக்களை காப்பாற்ற உயிர்த் தியாகத்துக்கும் தயாராக இருக்கிறது. சீன மருத்துவ துறை. எனவே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை சீனாவில் அதிகரித்திருக்கிறது.