சீனாவில் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 100யை தாண்டி இருக்கிறது, ஒரு புறம் கரோனா வைரஸ் தொற்றை தடுக்க சீன அரசு போராடி வரும் நிலையில், மறுபுறம் கட்டுக்கடங்காமல் உயிர்கொல்லி வைரஸ் பரவி வருகிறது.
திங்களன்று என்று ஒரே நாளில் மட்டும் 1300 பேர் கரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி இருக்கின்றனர். கொரோனா வைரஸ் தாக்குதலால் ஏற்பட்ட நிமோனியா காய்ச்சலால் இதுவரை 106 பேர் உயிரிழந்துவிட்டதாக சீனா தெரிவித்திருக்கிறது.
கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் ஆயிரக்கணக்கானோர் மருத்துவமனைகளில் தஞ்சமடைந்துள்ளனர். வைரஸ் தொற்றினை உறுதி செய்துகொள்ள உஹான் மருத்துவமனைகளில் உள்ள ரத்த பரிசோதனை கூடங்கள் 24 மணி நேரமும் இயங்கி வருகிறது.
உஹானில் உள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிவதால் போர்க்கால அடிப்படையில் இரண்டு பிரத்தியேக மருத்துவமனைகளை சீனா கட்டி வருகிறது. வைரஸ் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்ற ஐயத்தின் அடிப்படையில் 30 நகரங்களைச் சேர்ந்த சுமார் 33 ஆயிரம் பேரை சீன மருத்துவர்கள் தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.