Categories
உலக செய்திகள்

அதிகரிக்கும் கொரோனா வைரஸ்…. தீவிர சிகிச்சை பிரிவில் நோயாளிகள்…. எச்சரித்த சுகாதாரத்துறை அதிகாரிகள்….!!

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

பிரான்ஸ் நாட்டில் தெற்கே Occitanie நகரில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு சென்ற மாதம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையானது ஜீன் மாதத்தை விட பத்து மடங்கு அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் Occitanie நகரில் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.

அதில் “தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத மக்கள் அவற்றை போட்டுக் கொள்ள வேண்டும். மேலும் அனைவரும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி கவனமாக செயல்பட வேண்டும்”என்று தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் Occitanie நகரைச் சேர்ந்த 157 பேர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனபது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |