Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பயன்படுத்தப்பட்ட கொரோனா உடைகள்…. எங்களுக்கு பயமா இருக்கு…. பொதுமக்களின் எதிர்பார்ப்பு….!!

கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட உடைகள் சாலையில் வீசியதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதற்காக வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கொரோனா நோயாளிகளை சந்திப்பதற்கு மருத்துவர்கள், செவிலியர்கள், ஆம்புலன்ஸ் பணியாளர்கள் மற்றும் கொரோனா  பரிசோதனை செய்யும் பணியாளர்கள் பாதுகாப்பு உடை அணிந்து செல்கின்றனர்.

இதனையடுத்து பயன்படுத்தப்படும் கொரோனா உடைகள் அனைத்தும் முழுமையாக அழிக்கப்படுவது வழக்கம். ஆனால் சமீப காலங்களில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செட்டியப்பனூர், நெக்குந்தி பகுதியிலும், சுங்கச்சாவடி பகுதியிலும் சில நாட்களாக இந்த உடைகள் அங்குமிங்குமாக வீசப்பட்டு இருக்கின்றது. இதனால் கொரோனா பரவும் அபாயம் ஏற்படும் என்று பொதுமக்கள் அச்சத்தில் இருக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சாலையில் வீசப்படும் கொரோனா உடைகள் குறித்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Categories

Tech |