Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மணல் அள்ளிய குற்றத்திற்காக வாலிபர் கைது…. சிறையில் அடைக்கப்பட்டபின் கொரோனா தொற்று உறுதி…. அதிரடி நடவடிக்கையில் காவல்துறையினர்….!!

மணல் அள்ளிய குற்றத்திற்காக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட குற்றவாளிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதை அடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அழகர்நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஒரு வாலிபர் அனுமதியின்றி ஓடையில் மணல் அள்ளிய காரணத்திற்காக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேடசந்தூர் கிளை சிறையில் இரவு அடைக்கப்பட்டுள்ளார். முன்னதாகவே அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இவர் சிறையில் அடைக்கப்பட்ட பின்னரே இவருக்கு தொற்று இருப்பது உறுதியானது.

இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளார். மேலும் சிறை வளாகம் முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது. அங்கு பணியாற்றும் சிறைக் காவலர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் சிறையில் உள்ள அனைத்து கைதிகளுக்கும் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

Categories

Tech |