பீகார் கயாவில் வருகிற டிசம்பர் 29, 30, 31 தேதிகளில் “போத் மஹோத்சவ்” எனும் போதனை நிகழ்ச்சி திபெத்திய புத்த மதகுரு தலாய் லாமா தலைமையில் நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு தலாய் லாமா பீகார் மாநிலத்திற்கு வந்து உள்ளார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க 50 நாடுகளை சேர்ந்த 60,000 ஆன்மீக பயணிகள் பீகாருக்கு வர இருகின்றனர். இதன் காரணமாக கயா விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.
இதற்கிடையில் வெளிநாட்டு பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. சீன நாட்டில் மட்டும் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கையானது 10 லட்சத்தை கடந்து வருவதால் உலக நாடுகள் அச்சத்தில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் பல நாடுகளிலிருந்து வரும் ஆன்மிக பயணிகளை கொண்டு நடைபெற இருக்கும் தலாய் லாமாவின் போதனை நிகழ்வு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. வெளிநாடுகளில் இருந்து வருவோர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருவதால், போதனை நிகழ்வுக்கு தடைவிதிக்கப்படலாம் (அ) கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.